Tamilwin RSS Feeds - Latest News

வருக வருக எம் இனிய தமிழ் நெஞ்சங்களே.

இது உங்கள் தளம்.புங்குடுதீவின் மடத்துவெளி கிராமம் பற்றிய முழுமையான இணையம் இதுவாகும்தயாரிப்பு வேலையில்இருக்கும் இந்த தளம் முற்று பெரும் பொது சிறப்பான ஓரு இணையமாக மிளிரும் .நன்றி.

pungudutivu

நினைவேறுகிறது…

புதன், 14 ஜூலை, 2010





மடத்துவெளி வணக்கம்.வருக. அன்பு தமிழ் நெஞ்சங்களே,இந்த இணையதளம் புங்குடுதீவு மடத்துவெளி கிராமம் பற்றிய முழுமையான பதிவேடாக இருக்கும்.இது ஆரம்ப பரீட்சார்த்த பதிவுகளே.காலக்கிரமத்தில் மிக சிறப்பாக முற்றுப் பெறும்.நன்றி.

செவ்வாய், 30 மார்ச், 2010


மடத்துவெளி சனசமூக நிலையம்மடத்துவெளி சனசமூக நிலையம் என்பது புங்குடுதீவு மக்களின் மனதில் ஆழ பதிந்து தனது வரலாற்றை பதிவாக்கிக் கொண்ட ஒரு பெயராகும். மடத்துவெளி சனசமூக நிலையம் எழுபதுகளின் பின்னர் புங்குடுதீவில் ஒரு மாபெரும் புரட்சிகரமான மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு சமூக அமைப்பாகும் . இந்த நிலையம் முறைப்படி ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்து நான்காம் ஆண்டு தைத்திங்கள் பதினைந்தில் யா/கி/ச/௩௭சநி /௨௬௬ என்ற பதிவிலக்கதுடன் ஆரம்பிக்கபட்டு கமலாம்பிகை கனிஸ்ட மஹா வித்தியாலய வளவினுள் அமரர் க.ஐயாத்துரை ஆசிரியர் அவர்களின் பாரிய முயற்சியினால் சிறப்பாக வழிநடத்தப்பட்டு வந்தது.பின்னர் இந்த சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட அமரர்.ச.சொக்கலிங்கம் அவர்கள் இந்த சனசமூகநிளையத்தை திறம்பட செயற்படுத்தி வந்திருந்தார்.காலக்கிரமத்தில் தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட நிலையம் ஒரு ஸ்தம்பித நிலையை அடைந்திருந்தது. அறுபதுகளின் இறுதியில் கமலாம்பிகை வித்யாலய பழைய மாணவர்களான வ.நல்லையா (இராமச்சந்திரன் -நூலகர் )மகேஸ்வரன் (மலைப்பாம்பு) ,எ.இராசரத்தினம் (மு-கி-ச-உறுப்பினர் ,இ.இராசமாணிக்கம் (இசைக்கலைஞர் )போன்றோர் இணைந்து ஒரு சமூக சேவைக்கான எழுச்சியை முனைப்பாக்கினர்..இந்த கால கட்டத்தில் கமலாம்பிகை வித்யாலய வளவினுள் ஒரு கலை விழாவினையும் பின்னர் வல்லன் சண்முகநாதன் வித்தியாசாலை வளவினுள் ஒரு சிவராத்திரி விழாவினையும் நடாத்தியதோடு அந்த விழாக்களிலேயே நாடகங்களையும் அரங்கேற்றி தமது கலைத் தாக்கத்தினையும் வெளிபடுதினார்கள் . இத்தனைக்கும் பின்னால் புங்குடுதீவு கிழக்கின் சிற்பி என்றும் புரட்சியாளன் என்றும் போற்றப்படும் கண்ணாடி என்று செல்லமாக அழைக்கப்படும் அருணாசலம் சண்முகநாதன் இந்த கிராமத்தின் சுமைகளை தூக்கி தன் தோளிலே வைத்தான் . அவனது வழிகாட்டலில் புதிய இளைஞர் பாசறை ஒன்று கட்டி எழுப்ப பட்டது .முன்பு இயங்கி வந்த சனசமூக நிலையத்தின் எச்சங்களை துழாவி எடுத்தான்.ஒரு சாய்வு படிக்கும் மேசை உடனும் இரண்டு வாங்குகளினுடனும் எச்சங்களாக சொக்கலிங்கம் ஆசிரியர் வீட்டில் சனசமூகநிலையம் சுருங்கி போய் கிடந்தது.வீறு கொண்டெழுந்த சண்முகநாதன் இராமச்சந்திரன் .பாலசுப்ரமணியம் ,தர்மபாலன் போன்ற இளைஞர்களை இணைத்துக்கொண்டு இயங்க ஆரம்பித்தான். முதல் காரியமாக முருகன் ஆலய அன்னதான மடத்து மண்டபத்தில் இளமுருகன் சிறுவர் பாடசாலையை ஆரம்பித்து அதன் ஆசிரியையாக எஸ்.கமலாம்பிகை அவர்களை நியமனம் செய்தார்கள் . கிராமத்து இளைஞர்கள் கிளிதட்டு விளையாட்டில் இருந்து கரப்பந்தட்டதுக்கு மாறினார்கள்,விளையாட்டோடு நிற்காமல் ஒரு தற்காலிக வாசிகசாலையை அலுவலகத்தோடு சேர்த்து எ.வே.இளையதம்பி அவர்களின் கட்டிட தொகுதிக்கு பக்கத்தில் இடப்பக்கமாக நிறுவபட்டது .தரை சீமேந்தினாலும் சுவர் பகுதியைமரத்தினாலும் கூரையை ஓடு கொண்டும்எளிமையாக அமைக்கபட்ட சனசமூகநிலையம் எல்லோரும்பாராட்டும் விதமாக ஒரு இளைஞர் பாசறையாக அத்திவாரமாக அடித்தளமிட்டது. சனசமூகநிலயத்தின் நிர்வாகசபை இ.குலசேகரம்பிள்ளை ஆசிரியரின் தலைமையில்புதிய சரித்திரம் படைக்க புறப்பட்டது. சண்முகநாதனின் சிறந்த வழிகாட்டலிலும் சேவை மனம் படைத்த இளைஞர்களின் திறமையினாலும் சிறப்பாக செயல் பட்டது.சனசமூக நிலையத்தின் சிறப்பான தடைகள் இல்லாத வாசிகசாலை செயல்பாடு புங்குடுதீவு மக்களின் உள்ளதை கொள்ளை கொண்டது மறக்க முடியாதது. சனசமூகநிலயத்தின் முன்னணி வழிகாட்டிகளாக போசகர்களாக போ.நாகேசு (வர்த்தகர்),க.தியாகராசா ஆசிரியர் ,ஆகியோர் முன்னிற்க எ.சண்முகநாதன்,என். தர்மபாலன் எஸ்.எம்.தனபாலன் சிவ.-சந்திரபாலன் மு.வேலுப்பிள்ளை பொன்.அமிர்தலிங்கம் க.சந்திரசேகரம் ஆகியோரின் நிர்வாக திறனில் நிலையம் அபரிதமான வளர்ச்சி கண்டது. பதவி ஆசை இல்லாத இளைஞர்களை அந்த பாசறை கொண்டிருந்தது என்பதை பெருமையாக சொல்லி கொள்ளவேண்டும் .மூத்த உறுப்பினர்கள் பின்னே வந்த மிக சிறிய இளைஞர்களிடையே நிர்வாக பதவிகளை கொடுத்து தாங்கள் வழிகாட்டி கொண்டிருந்தது சிறப்பான ஒரு அமசமாக மிளிர்ந்ததேம். அடுத்த தலைமுறையாக ப.யோகேஸ்வரன்எ.திகிலழகன் எம் .முத்துகுமார் ,எஸ்.எம் .குணபாலன்.எ.சதாசிவம்,கு.ஜெகநாதன் .வே.கனகராசா.தா.சிவகுமார்,ம.மோகனபாலன் து.ரவீந்திரன் எஸ் .சிவலிங்கம் ,க.உலகேஸ்வரன்,தி.கருணாகரன் ,சி.விசயன் ,இ.ரவீந்திரன் .எ.பாலசுந்தரம்.கே.ரவி.எஸ்.சட்சிதானந்தன் சின்னதுரை ,சு.சண்முகநாதன் ஐ.தர்மகுலசிங்கம்கா.நாகரத்தினம் தா.சிவபாலன்.என்ற வரிசையில் ஒரு இளைஞர் பட்டாளமே உருவானது.சனசமூக நிலையத்தின் சீரிய செயற்பாடு கண்ட வர்த்தகர் எ.வே.இளையதம்பி அவர்கள் சனசமூகநிலையம் அமைந்திருந்த காணியைஇனாமாக தாரை வார்த்து கொடுத்து பெருமை தேடிக்கொண்டார். நிலையத்துக்கு ஒரு இரட்டை மாடி கட்டிடத்தை நிறுவ சண்முகநாதன் திட்டம் வகுத்திருந்தார்.இடைநடுவில் அவர் கனடாவுக்கு இடம்பெயர அப்போதைய நிதிநிலைமையை கணக்கிலெடுத்து கொண்ட ந.தர்மபாலன் திட்டத்தை மாட்டி இப்போதைய அமைப்பில் நிலையத்தை அமைக்கமுன்னின்று பாடுபட்டார்.தமக்கென காணி கிடைத்ததும்துரிதமாக செயல் பட்ட நிலையத்தினர் நிரந்தரமான ஒரு கட்டிடத்தை அழகாக அமைத்து ஒரு சாதனையை படைத்தனர். வாசிகசாலை சிறப்பாக வடிவமைக்கபட்டு அணைத்து பத்திரிகைகள் சஞ்சிகைகளும் வசிப்புக்கென வைக்கபட்ட சிறப்பை கொண்ட வரலாறை படைத்திருந்தது.கிராமம் பூராக திரட்டபட்ட சுமார் ௫௦௦நூல்களைக் கொண்டதோடு வாசிகர்களின் உள்ளத்தை மகிழ்வூட்டவென வானொலிசெவையையும் வழங்கி இருந்தது . வாசிகசளைக்கென வீரகேசரி ஈழநாடு மித்திரன் தினகரன் சுதந்திரன் போன்ற பத்திரிகைகளும் குமுதம் ஆனந்தவிகடன் ராணி தேவி சுடர் சிரித்திரன் இதயம் சாவி பாக்யா மல்லிகை போன்ற வார இதழ்களும் தொடர்ந்து பல ஆண்டுகளாக விநியோகிக்கபட்டு வந்தது பெருமையான விசயமாகும். இவற்றை நீண்ட காலமாக பொ.நாகேசு ,எஸ்.கே.மகேந்திரன்,வே.பாலசுப்பிரமணியம்,ப.கனகலிங்கம் ,சிவ.சந்திரபாலன் ,க.உலகேஸ்வரன்போன்றோர் தங்கள் செலவில் வழங்கி வந்தனர். தினசரிப் பத்திரிகைகளை யாழ்நகரில் இருந்து தினமும் காலை நேரத்திலேயே தனது வாகன சேவையில் எடுத்து வந்த பொன்னம்பலம் அவர்கள் (இருபிட்டி)மறக்க முடியாத நன்றிக்குரியவர்.சனசமூக நிலையத்தின் செயல் பாடுகள்------------------------------------------------கிராமத்தின் குடி நீர் பிரச்சினையை தீர்க்க சிறிய கிணறுகளை தோண்டியமைபொதுக் கிணறுகளை தூர் வார்ந்தமை,குளங்களை ஆழமாக்கியமை ,முட்டு முழுதாக மது ஒழிப்பை உருவாக்கி கட்டுப்பாடில் வைத்திருந்தமை ,மீன் பிடி,விநியோகத்தில் சீரான முறையை உருவாக்கியமை,விளையாட்டு துறையை ஊக்குவித்து வாடா மாகாணத்திலேயே சிறந்த உதைபந்தாட்ட கரப்பந்தாட்ட அணிகளை உருவாக்கியமை,கிராமத்தில் எந்த விதமான சமூக சீர்கேடுகளும் இல்லாத கட்டு கோப்பில் மக்களை வழி நடத்தியமை ,ஆலயங்களின் தொண்டில் உதவியமை ,அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி விடுதலை பாதையில் அணி வகுத்தமை மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் உதவியமை பாடசாலை முன்னேற்றத்தில் பங்களிதமை ,கலை விழாக்கள் ,சிவராத்திரி விழாக்கள் என நடாத்தி சிறந்த நாடக கலைஞர்களை உருவாக்கியமை ,நெற்பயிர் செய்கைக்கு ஊக்கம் கொடுத்து விவசாயத்தை மேம்படுதியமை என நீண்டு செல்லும் வரலாறு உண்டு.

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

திங்கள், 15 மார்ச், 2010

பெரிய வாணர்சின்ன வாணர்க.ஐயாத்துரைஇ.குலசேகரம்பிள்ளைக.தியாகராசாபொ.நாகேசுஇ.சபாபதிபிள்ளைக.புண்ணியமூர்த்திச.சொக்கலிங்கம்நா.கணேசராச குருக்கள்அ.மாணிக்கம்க.வேலாயுதபிள்ளைக.நகனாதிபே.நமசிவாயம்க.அம்பலவாணர்

வெள்ளி, 12 மார்ச், 2010


எம்மவர் படைப்புகள்
மு.தளையசிங்கம் -------------------------மெய்யுள் போர்ப்பறைஈழத்து ஏழாண்டு இளகிய வளர்ச்சி கலைஞரின் தாகம் ஒரு தனிவீடு புதுயுகம் பிறக்கிறது முற்போக்கு இலக்கியம் பூரணி -சஞ்சிகை ஈழ விடுதலை -பத்திரிகை உள்ளொளி .பத்திரிகை க.திருநாவுக்கரசு ------------------------தீவகம் -பத்திரிகை சு.வில்வரத்தினம் ------------------------காற்றுவெளிகிராமம்நெற்றிக்கண் காலத்துயர் வாசிகம் பூரணி -சஞ்சிகை அலை -சஞ்சிகை ஈழத்து சிவானந்தன் -----------------------------ஆலய மணி -சஞ்சிகை தமிழ் மகன் -சஞ்சிகை வாழ்க்கை -சஞ்சிகை விடுதலை -சஞ்சிகை அடிகளார் பாதையிலே ஈழத்தில் நான் க ண்ட சொல் செல்வர்கள் ஈழத்து சொல் பொழிவுகள் இதயங்கள் ஒரு திருமுருகன் வந்தான் கண்ணதாசனை கண்டேன் காலனை காலால் உதைத்தேன்தம்பி ஐயா தேவதாஸ் -------------------------------புங்குடுதீவு-வாழ்வும் வளமும் இலங்கை தமிழ் சினிமாவின் கதை பொன்விழா கண்ட சிங்கள சினிமா இலங்கை திரையுலக முன்னோடிகள் மூன்று பாத்திரங்கள்--வீரகேசரி சிங்கள மொழிபெயர்ப்பு நெஞ்சில் ஓர் ரகசியம் -வீரகேசரி சிங்கள மொழிபெயர்ப்பு இறைவன் வகுத்த வழி -வீரகேசரி மொழிபெயர்ப்பு மு.பொன்னம்பலம் ---------------------------அது -கவிதை தொகுப்பு விடுதலையும் புதிய எல்லைகளும் யதார்த்தமும் ஆத்மார்த்தமும் -கட்டுரை தொகுப்பு கடலும் கரையும் -சிறுகதை தொகுதி காலி லீலை-கவிதை தொகுதி நோயில் இருத்தல் -சாகித்ய மண்டல பரிசு திறனாய்வு சார்ந்த சில பார்வைகள ஊஞ்சல் ஆடுவோம் -சிறுவர் கவிதை துயரி -நெடுங்கதை வீடும்பல்லக்கும்-சிறுகதை தொகுப்பு சங்கிலியின் கதை -நாவல் விசாரம் -கட்டுரை தொகுப்பு புனித நீர் -நாடகம் யுகமொன்று மலரும் -நாடகம் திசை -பத்திரிகை சத்தியம் .-பத்திரிகை பொறியில் அகப்பட்ட தேசம் நாவேந்தன் (வீ.டி..திருநாவுக்கரசு )--------------------------------------------------வாழ்வு-சாகித்ய மண்டல பரிசு -சிறுகதை தொகுதி தெய்வமகன் -சிறுகதை தொகுதி தமிழ்குரல் -பத்திரிகை சங்கபலகை -பத்திரிகை நம்நாடு -பத்திரிகை நாவேந்தன் -பத்திரிகை இந்து மகேஷ் (சின்னையா மகேஸ்வரன்)------------------------------------------------------------இதயம் -சஞ்சிகை பூவரசு -சஞ்சிகை வீரகேசரி பிரசுர நாவல்கள் (மித்திரன் தொடர்கதையாக வந்தவை )ஒரு விலை மகளை காதலித்தேன் -1974நன்றிகடன் -----------------------------------1979 இங்கேயும் மனிதர்கள் -------------------1977 அவர்கள் தோற்று போனவர்கள் (முற்றுபெறாத ராகங்கள் )காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி (ஆன்மீக தொடர்-2002 )வீ.டி.இளங்கோவன் ---------------------------மூலிகை -சஞ்சிகை வாகை -சஞ்சிகை கரும்பனை -கவிதை தொகுப்பு இது ஒரு வாக்கு மூலம் -கவிதை தொகுப்பு சிகரம்- கவிதை தொகுப்பு மன்மறவா தொண்டர் மண் மறவா மனிதர்கள் ப.கனகலிங்கம் -சந்திப்பு -மாத சஞ்சிகை
இடுகையிட்டது pungudutivu நேரம் 22:41 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்

2009(19) இல் அழுத்தி மற்ற பக்கங்களை காணலாம்
2009 (19) அழுத்தி மற்ற பக்கங்களை காணலாம்
இடுகையிட்டது pungudutivu நேரம் 18:29 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்

இசைக் கலைஞர்கள்
பொன்.சுந்தரலிங்கம் -கர்நாடகம் ,விடுதலை கீதங்கள் எஸ் .ஜி.சாந்தன் -விடுதலை கீதங்கள் க.தாமோதரம்பிள்ளை -ஆசிரியர் திருப்பூங்குடி வி.ஆறுமுகம் -வில்லிசை பொன்சுந்தரலிங்கம் கர்நாடகம்வானொலி மெல்லிசை சண்முகம்பிள்ளை -மிருதங்கம் இ.இராசமாணிக்கம் -பல் வாத்திய கலைஞர் நடராச -வயலின் க.வினசிதம்பி ஆசிரியர்தா.இராசலிங்கம் .ஆசிரியர் நா.தில்லையம்பலம் -ஆசிரியர் கனகசுந்தரம் -ஆசிரியர் சந்திரபாலன் ஆசிரியர் தம்பி ஐயா-தபேலாகனகலிங்கம் ஆசிரியர்சண்முகலிங்கம் ஆசிரியர் என்-ஆர்.கோவிந்தசாமி -நாதஸ்வரம் (இவரது தயார் புங்குடுதீவை சேர்ந்தவர் )என்.ஆர்.சின்னராசா -தவில் என்.ஆர்.சந்தனகிருச்ணன் -நாதஸ்வரம் விமலாதேவி -ஆசிரியர்ராஜேஸ்வரி -ஆசிரியர் வாசுகி விக்னேஸ்வரன் -நாட்டிய நர்த்தகி மஞ்சுளா திருநாவுக்கரசு -வயலின்
இடுகையிட்டது pungudutivu நேரம் 14:03 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்

திரைப்பட கலைஞர்கள்
வி.சி.குகநாதன் .--------இந்திய திரைப்பட இயக்குனர் கதை வசன கர்த்தாசி.சண்முகம் ----------சிங்கள திரைப்பட கதாசிரியர் எம்.உதயகுமார் ----------ஈழத்து திரைப்பட கதாநாயகன் -கடமையின் எல்லை ,மஞ்சள் குங்குமம் ,மாமியார் வீடு(இந்தியா) ஜீவா நாவுக்கரசன் -----கதைவசன கர்த்தா -சமுதாயம் (ஈழத்து திரைப்படம்)எ.வீ.எம்.வாசகம் ------ஒளிப்பதிவாளர் -ரன் முது தூவ ,வாடைக்காற்று சுந்தரம்பிள்ளை ஆனந்தசிவம் -தயாரிப்பாளர் .இந்தியா பொன். ஆரூரன் -----தயாரிப்பாளர் .சிங்களம் .சந்துனி,நாகன்யா,லீடர்(மனோன் சினி)எஸ்.எம்.தனபாலன்.---கனடா திரைப்படம் .கரை தேடும் அலைகள்
இடுகையிட்டது pungudutivu நேரம் 13:25 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்

அரங்கேறிய நாடகங்கள்
ஊரதீவு இளம்தமிழர் மன்றம் -------------------------------------------- எனக்காக இரு விழிகள் என்ர ஆத்தே மடத்துவெளி சனசமூக நிலையம்(மலர்விழி நாடக கலா மன்றம் ) ---------------------------------------------------------------------------------------------------அந்தஸ்து செத்தவன் சாக இருப்பவனை சாகடிப்பதாகிராமத்து அத்தியாயம் சுமை தாங்கிஜீவராகங்கள் மெழுகுவர்த்தி அணைகின்றது பகலிலே யாழ்ப்பாணம் மயக்கங்கள் மலராத வாழ்வு
இடுகையிட்டது pungudutivu நேரம் 12:58 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்
05.02.2010

நாடக கலைஞர்கள்
நாடக கலைஞர்கள்
-----------------------------
க.செல்வரத்தினம் -புங் 11
ஐ -சிவசாமி புங் 10 அம்ப்ரோஸ் பீட்டர் - புங் 10 நாட்டு கூத்து
ச.ரமணன் புங் 2
க.சிவானந்தன் புங் 7
ந.சண்முகலிங்கம் புங் 3
நா.கருணாநிதி புங் 7
ந.இராசதுரை புங் 7
எஸ் .சேனாதிராச புங் 4
மகேஸ்வரன் புங் 8 (மலைப்பாம்பு )
ந.காந்தி புங் 7
எ.இராசரட்னம் புங் 8
இ.இராசமாணிக்கம் புங் 8
எஸ்.எம் .தனபாலன் புங் 8
த.சிவபாலன் புங் 8
எ.சண்முகநாதன் புங் 8
ந.தர்மபாலன் புங் 8
சிவ.சந்திரபாலன் புங் 8 மகேந்திரன் (அம்மான்) புங் 4க.மகாலிங்கம் புங் 4 க.அரியரத்தினம் புங் 4 க.ஜெயபாலன் புங் 4 க. ஜெயக்குமார் புங் 4ஆனந்தன் புங் 7தி.கருணாகரன் புங் 8ப.யோகேஸ்வரன் புங் 8எஸ்.சச்சிதானந்தன் புங் 8 க. சந்திரசேகரம் புங் 8 பொ.அமிர்தலிங்கம் புங் 8 க.ரவீந்திரன் புங் 8 பொ.கிருஷ்ணபிள்ளை புங் 8 இரா. கந்தசாமி புங் 7 அ.திகிலழகன் புங் 7 செ. சிவலிங்கம் புங் 7 ஈழத்து சிவானந்தன் புங் 3 பூங்கோதை புங் 4 சு.கோகிலதாசன் புங் 6 பத்ம .ரவீந்திரன் புங் 7 க. சசி புங் 8 ர.ரஞ்சினி புங் 7 மு.மருதலிங்கம் புங் 7 நாக.கோணேஸ்வரன் புங் 7 நா.இராசகுமார் புங் 8 நா.செல்வகுமார் புங் 8 கா.சண்முகலிங்கம் புங் 4 கா.ஸ்ரீதரன் புங் 4 த. சிவகுமார் புங் 8 ச.மோகனதாஸ் புங் 7 கி.சௌந்திரராசன் புங் 7 வி.பகீரதன் புங் 8 சி .நந்தகுமார் புங் 8 கா.பாலசுபிரமணியம் புங் 8 ச .யோகமலர் புங் 8 க.நிர்மலாதேவி புங் 8 க.ஸ்ரீஸ்கந்தராச புங் 7 தம்பி ஐயா தேவதாஸ் -புங் 11(இந்த பகுதி இன்னும் நிறைவு பெறவில்லை )
இடுகையிட்டது pungudutivu நேரம் 04:10 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்

ஊடகவியலாளர்கள்
தம்பியையா தேவதாஸ் -இலங்கை வானொலி கல்வி சேவை
வீ.டி.இளங்கோவன் -வானொலி பத்திரிகை
க.செல்வரத்தினம் -இலங்கை வானொலி நாடகம் பேச்சு ராஜேஸ்வரி சண்முகம் -வானொலி அறிவிப்பாளர்
இரா.கந்தசாமி -வானொலி -கனடா
நாகேசு தர்மலிங்கம் -வானொலி பத்திரிகை (வீரகேசரி தினகரன்)
துரை.ரவி - -வானொலி பத்திரிகை (கனடா)
ந.தர்மபாலன் -பத்திரிகை (கனடா)
எஸ்.எம்.தனபாலன்.பத்திரிகை (கனடா)
சிவ-சந்திரபாலன்- பத்திரிகை வானொலி தொலகாட்சி விளையாட்டுத்துறை (சுவிஸ்)
சீராளன் -வானொலி (பிரான்ஸ் )
ஆர்.ஆர்.பிரபா -வானொலி (கனடா)
க.அரியரத்தினம் -வானொலி (பிரான்ஸ்)
தி-மோகன் - வானொலி (பிரான்ஸ்)
சந்தியோ அமிர்தராஜ் -வானொலி (ஹோல்லந் )
செ.சுரேஷ் -வானொலி தொலகாட்சி (சுவிஸ்)
சண்-ரவி - இணையம் -மை கதிரவன் (சுவிஸ்)எஸ்.ஸ்ரீ குகன் - இணையம் -லங்காஸ்ரீ (சுவிஸ்)

இடுகையிட்டது pungudutivu நேரம் 03:47 0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்

எழுத்தாளர்கள்
மு.தளையசிங்கம் -சிந்தனை ,புரட்சி எழுத்தாளர்
சு.வில்வரத்தினம் -கவிஜர் ,பத்திரிகையாளர்
த.துரைசிங்கம் -மழலை எழுத்தாளர்
மு.பொன்னம்பலம் -கவிஜர்,எழுத்தாளர்
பொன்.கனகசபை ஆன்மீக எழுத்தாளர் கா.குகபாலன் -எழுத்தாளர் -புவியியல் சி.ஆறுமுகம் -ஆன்மீக எழுத்தாளர்சி.க.நாகலிங்கம் -ஆன்மீக எழுத்தாளர்வீ.வ.நல்லதம்பி இலக்கியம் எஸ்.கே.மகேந்திரன் -எழுத்தாளர்
இந்து மகேஷ் -வீரகேசரி நாவல்கள் ,சிறுகதை .இதழியல்
தம்பியையா தேவதாஸ் -மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
க.திருநாவுக்கரசு. -எழுத்தாளர்
ப.கனகலிங்கம் - இதழியல் எழுத்தாளர்
வி.டி.திருநாவுக்கரசு -இதழியல் எழுத்தாளர் (நாவேந்தன்)
புலவர் ஈழத்து சிவானந்தன் -இதழியல் பத்திரிகை ஆன்மீக எழுத்தாளர்
மு.நேமிநாதன் -இதழியல் .ஆங்கில மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
வீ.டி.இளங்கோவன் -கவிஜர்.எழுத்தாளர்
நக.பத்மநாதன் -எழுத்தாளர்
ஐ.சிவசாமி -கவிஜர் .நாடக எழுத்தாளர்
க.செல்வரத்தினம் -நாடக எழுத்தாளர்
நாகேசு தர்மலிங்கம் -எழுத்தாளர்
எஸ்.எம்.தனபாலன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
நக.சாந்தலிங்கம் - அரசியல் எழுத்தாளர்
சித்ராமணாளன் -அரசியல் எழுத்தாளர்
கௌசல்யா சொர்ணலிங்கம் -கவிதை,எழுத்தாளர்
கமலாசினி சிவபாதம் -எழுத்தாளர்
நா.தேவதாசன் -கவிதை எழுத்தாளர்
யசோத பொன்னம்பலம் -இதழியல்
வீ.டி.தமிழ்மாறன் .இதழியல் அரசியல் எழுத்தாளர்
ச.சிவானந்தன் -கவிதை எழுத்தாளர் (தாட்சாயினி)
கனக.திருச்செல்வம் -கவிதை எழுத்தாளர்
சிவ-சந்திரபாலன் -நாடகம் வானொலி கவிதைஇதழியல் எழுத்தாளர்
துரை.ரவீந்திரன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
கண்ணதாசன் .-எழுத்தாளர்
சு-மகாலிங்கம் -எழுத்தாளர்
ஐ .க.அரியரத்தினம்-எழுத்தாளர் இதழியல்
பகீரதன் - கவிதை எழுத்தாளர் (சிவசித்ரா)
மைத்தில் அருளையா -கவிதை எழுத்தாளர்
மாணிக்கவாசகர் -கவிதை எழுத்தாளர்
மு.முத்துக்குமார் -நாடகம் கவிதை வானொலி எழுத்தாளர்
சந்தியோ அமிர்தராஜ் -இதழியல் வானொலி எழுத்தாளர்
சண்முகம் மோகனதாஸ் -கவிதை வானொலி எழுத்தாளர்
அம்மான் மகேந்திரன் -நாடக எழுத்தாளர்
பாலகணேசன் -ஆய்வு எழுத்தாளர்த-மதி - கவிதை எழுத்தாளர்எஸ்-சுரேஷ் -கவிதை எழுத்தாளர்
01.03.2010

புங்குடுதீவு ஓரு நோக்கு
புங்குடுதீவு ஓரு கிராமம் அல்லது ஊர் .எப்படியும் சொல்லி கொள்ளலாம் .ஏன் என்றால் யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள கிராமங்களிலேயே ஓரு மிகபெரிய ஊர் இதுவாகும் . யாழ் தீபகற்பத்தின் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளின் மத்தியிலே அமைந்துள்ளது .ஒல்லாந்து நாட்டவர் தமது ஆட்சியின் போதுஇந்த ஏழுதீவுகளுக்கும் ஹோல்லந்தில் உள்ள இடங்களின் பெயர்களை சூடி மகிழ்ந்தனர்.அந்த வகையில் புங்குடுதீவுக்கு மிட்டில்ஹ்பெர்க் என்று நாமம் இட்டு அழைத்தனர் . யாழ்ப்பானதிலிருந்து தெற்கு பண்ணை பாலம் ஊடாக மனடைதீவு சந்தி அல்லைப்பிட்டி அராலி சந்தி வேலணை வங்களாவடி வேலனைதுறை கடந்து புங்குடுதீவுக்கான இலங்கையிலேயே பெரியதான வாணர் தாம்போதி மேலே பயணம் மேற்கொண்டால் புங்குடுதீவை அடையலாம். புங்குடுதீவு சுமார்ஆறு மைல்நீளமும் ஐந்து மைல் அகலமும் கொண்ட நால் புறமும் கடலால் சூழப்பட்டு வேலையுடன் நேரிய பேரு வீதியினால கடலினூடே இணைக்க பட்ட ஓரு பிரதேசமாகும். ஓரளவு சதுர வடிவில் இருந்தாலும் கேரதீவு ஓடான நீரேரியின் பிரிப்பினால் ப எழுத்து வடிவிலும் தோன்றும் .வட கிழக்கே வேலனைத்தீவினையும் மேற்கே நயினாதீவினையும் தென்மேற்கே தூரத்திலே நெடுன்தீவினையும் கொண்டு மத்தியிலே இத்தீவு சீராக அமைந்துள்ளது, தீவின் தெற்குப் பகுதி உயர்வாகவும் வடக்கு பகுதி தாழ்வாகவும் காணபடுகிறது . புங்குடுதீவில் பல வகையான தரை அமைப்புகளும் காணப் படுகின்றன.மடத்துவெளி கரை பகுதிகள் சீனி போன்ற தூய வெள்ளை பளிங்கு மணல் பகுதியாகவும் ஊரதீவு மட்டும் தீவின் தெற்கு பகுதி கரைகள் இளமைன்சல் மணல்பகுதியாகவும் இருகின்றன.மடத்துவெளி ஊரதீவு பகுதிகள் சமதரைகளாக அமைந்துள்ளன.மேல் பகுதி மணல் தன்மையாகவும் சட்டு கீழே நரை நிற மக்கியாகவும் இன்னும் கீழே நல்ல தரமான களிமண்ணாகவும் அமைந்துள்ளது.வல்லன் பகுதி மற்றும் வீராமலை பகுதிகள் விவசாயத்திற்கு சிறந்த சிறிய குறுநி கலந்த கருநிற நிலமாக உள்ளன.குரிசிக்காடு போக்கதை பகுதிக்கு மேற்கே மிக அசாதாரணமான வகையில் செம்மண் பகுதியாகக உள்ளது.பெருங்காடு இருபிட்டி தெற்கு போன்ற பகுதிகள் மேலே குறைந்தளவு மண்ணும் கட் பாங்கான கீழ் பகுதியாகவும் காணப்படுகின்றன. இந்த தரை தோற்ற அடிப்படையில் புங்குடுதீவில் மடத்துவெளி ஊரதீவு இருபிட்டி வடக்கு வல்லன் பகுதிகளில் நெல் பயிர் செய்கைக்கு உட்படுத்த படுகின்றன. வல்லன் வீரமலை நடுவுதுருதி பகுதிகளில் மிளகாய் புகையில வெங்காயம் போன்றன தரமான முறையில் பயிரிடபடுகின்றன-சுமார் நாற்பது ஆண்டுகளின் முன்னே வரை பெரும்பாலான மேட்டு பகுதிகளில் சிறு தானியங்களான வரகு சமை குரக்கன் பயறு உழுந்து பயிர்கள் பயிரிடப்பட்டன.இவற்றை விட நிறைந்த பனை தென்னை வளம் மிக்க கிராமமாக புங்குட்தீவு திகழ்கின்றது. விருட்சங்களாக வேம்பு பூவரசு ஆள் அரசு இத்தி கதியால் முருங்கை சீமைகதியால் போன்றனவும் கடல்கரை ஓரங்களில் ஆவாரை கற்றாளை கள்ளி கொட்டனி போன்ற மருத்துவ குணாசெடிகளும் காணபடுகின்றன
இடுகையிட்டது pungudutivu நேரம் 15:24

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen

இந்த இடுகையின்
12.2009

பெரிய ஆலயங்கள்
பெரிய ஆலயங்கள் ------------------------ ஊர்ரதீவு பாணாவிடை சிவன் கோவில் மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலயம் மடத்துவெளி வீரகத்தி விநாயகர் ஆலயம் வல்லன் திருபெருந்துறை நாகதம்பிரான் ஆலயம் வல்லன் இலுபெண்ணை நாச்சிமார் கோவில் வல்லன் ஹரிஹர புத்திர ஐயனார் கோவில் கோரியாவடி நாயம்மா கோவில் ஸ்ரீ ராஜா ராஜேஸ்வரி அம்மன் கோவில் (கண்ணகி அம்மன்) கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயம் தல்லையபற்று முருகமூர்த்தி கோவில் சந்தையடி வீரகத்தி விநாயகர் கோவில் kiraanchiyampathi கந்தசாமி கோவில் குறிகட்டுவான் மனோன்மணி அம்பால் கோவில் (பேச்சியம்மன் ) ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் (சிவன் கோவில்) ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி ஆலயம் வீரகத்தி விநாயகர் ஆலயம் -அரியநாயகன்புலம் பெரியபுலம் வீரகத்தி விநாயகர் கோவில் பெருங்காடு புரட்டஸ்தாந்து தேவஸ்தானம் புனித சவேரியார் கோவில் புனித அந்தோனியார் ஆலயம்
இடுகையிட்டது pungudutivu நேரம் 01:31

27.12.2009

வாணர் தாம்போதி

அம்பலவாணர் தாம்போதி புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி வாணர் சகோதரர்களின் அரிய முயற்சியின் பலனாக இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.ஒரு நாட்டின் கிராமங்கள் முன்னேற்றம் அடைவதற்கு அங்குள்ள போக்குவரத்து பாதைகள் வசதியாக அமைந்திருக்க வேண்டும். தீவுப்பகுதிக்கிராமங்களுக்கு தரைப்பாதைகள் மட்டுமின்றி கடற்பாதைகளும் முக்கிய தேவைகளாக அமைகின்றன.யாழ்ப்பாண நகரத்திலிருந்து 20 கிலோ மீற்றர் தூரத்தில் நடுக்கடலில் ~ப வடிவில் அமைந்திருக்கும் நலப்பரப்புத்தான் புங்குடுதீவு கிராமம்.யாழ்ப்பாண நகரையும் வேலணைத்தீவையும் இணைக்கும் கடல்மீதான தரைப்பாதை பண்ணை தாம்போதி என்று அழைக்கப்படுகிறது. புங்குடுதீவுக்கும் வேலணை தீவுக்கும் இடையில் பரந்து கிடக்கும் கடலுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள தரைப்பாதை ~~அம்பலவாணர் தாம்போதி என்று அழைக்கப்படுகிறது. புங்குடுதீவில் பிறந்த அம்பலவாணர் என்ற பெரியார் இத்தாம்போதியை அமைத்தமையால் இதற்கு அந்தப்பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது.4.8 கிலோமீற்றர் தூரமுள்ள இத்தாம்போதி இலங்கையிலேயே மிகநீண்ட தாம்போதியாகும். புங்குடுதீவு மக்கிளன் நீண்டகால முயற்சியின் பின்பே இது அமைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் இரண்டு பஸ்கள் எதிரெதிரே கடக்கக்கூடிய அகலமான வீதி.ஐம்பதுக்கு மேற்பட்ட மதகுகளும் ஒரு பெரிய பாலமும் இந்த நீண்ட பாதையில் அமைந்திருக்கின்றன. கடலின் நடுவே பெரிய பாறாங்கற்கள் நட்டு அதன்மீது மணலும் சீமெந்தும் பூசி தார்இட்டு நீண்டவீதுpயாக இந்த தாம்போதி அமைக்கப்பட்டிருக்கிறது. புங்குடுதீவின் போக்குவரத்தை தரைப்பாதையினூடாக அமைத்துக்கொடுத்த பெருமை இந்த அம்பலவாணர் தாம்போதிக்கே உரியது.மேற்படி பாதையை அமைப்பதில் முன்னின்று உழைத்த அம்பலவாணர் சகோதரர்களை, புங்குடுதீவு மக்கள் என்று நன்றியுடன் நினைவில் வைத்திருக்கிறார்கள். புங்குடுதீவில் பிறந்த சமூக சேவகர்கள்தான் பெரிய வாணரும் சின்னவாணரும். இவர்கள் இருவரும் இளமைக்காலத்திலேயே புங்குடுதீவு மக்கள் போக்குவரத்தில் அனுபவிக்கும் கஷ்டங்களை அனுபவரீதியாக உணர்ந்திருந்தனர்.பெரிய வாணர் படிப்பு முடிந்ததும் தொழில்தேடி மலேசியா சென்றார். மலேசியாவில் தீவுகளுக்கிடையே அமைந்துள்ள தாம்போதிகள் போன்று புங்குடுதீவுக்கும் வேலணைக்கும் இடையில் ஒரு பெரியதாம்போதியை அமைக்கவேண்டுமென்று அவர் கனவு கண்டார்.தமது கனவை நனவாக்க பெரிய சாதனைகளை அவர் செய்யவேண்டியிருந்தது.மலேசியாவில் வாழ்ந்த புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி மலாயா – புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி, புங்குடுதீவு மக்களின் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கான வழிவகைகளை ஆராய்ந்தார். 1918 ஆம் ஆண்டு நாடு திரும்பிய பெரியவாணர் முறைப்படி தாம்போதியை அமைக்கவேண்டுமென புங்குடுதீவிலுள்ள வீடுகள் தோறும் கையொப்பம் வாங்கி அரசுக்கு அனுப்பினார். தாம்போதி அமைப்பது சம்பந்தமாக கொழும்பில் அரசபிரநிதிகளைச் சந்திப்பது, பத்திரிகைகளுக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது, பத்திரிகைகளுக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது, போக்குவரத்து அவலங்களைப் புகைப்படங்கள் மூலம் நாடு முழுவதும் அறியச்செய்வது போன்ற பணிகளில் பெரியவாணர் முழு முயற்சியுடன் ஈடுபட்டார். புங்குடுதீவிலுள்ள வீடுகள் தோறும் சென்று கையொப்பங்களை வாங்குவதில் சின்ன வாணரும் அவடன் ஈடுபட்டார்.1922 ஆம் ஆண்டு ~~புங்குடுதீவு மகாஜன சேவாசங்கம் என்ற சங்கத்தை ஆரம்பித்த அம்பலவாணர் சகோதரர்கள், பல அங்கத்தவர்களை சேர்த்துக்கெண்டனர். இதற்காக அதனை 1926 ஆம் ஆண்டு ~~அகில இலங்கை மகாஜன சேவா சங்கம் என்று பெயர்மாற்றினார்கள்.இந்த அமைப்பினூடாக அரச பிரதிநிதிகள், தேசாதிபதி போன்றோரை அழைத்து வந்து பிரச்சினைகளை எடுத்துக்கூறினர். அதன் பலனாக 1935 இல் சட்டநிரூபண சபையில் ~~தாம்போதி அமைக்கும் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.சட்டநிரூபண சபையில் அங்கத்தவர்களாக இருந்த கண்டி அங்கத்தவர் பண்டிட் பட்டுவந்து டாவ, தொழிற்சங்கவாதி ஏ.ஈ.குணசிங்க, ஆங்கிலேயப் பிரதிநிதி சேர் வில்லியம் ஆகியோர், தாம்போதி அமைக்க வேண்டும் என்று பல ஆதாரங்களுடன் வாதாடி அனுமதியையும் நிதியையும் பெற்றுக்கொண்டனர். வாணர் சகோதரர்கள் கண்ட கனவு நனவாகியது.1935 ஆம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதி வேலை ஆரம்பமாகியது. பல்வேறு வழிகளில் சமூகப்பணியாற்றிய பெரியவாணர் தீவக மக்களின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு 1947 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். அப்பொழுது அவரால் 3701 வாக்குகளையே பெறமுடிந்தது. பெரும்பாலும் புங்குடுதீவு மக்களே அவருக்கு வாக்களித்தனர். பொதுத்தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற அல்பிரட் தம்பி ஐயாவை அழைத்து தாம்போதி வேலையைப் பூர்த்தி செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். காலூர் எம்.பி.அல்பிரட் தம்பிஐயா 1953 ஆம் ஆண்டு அம்பலவாணர் தாம்போதியை மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து வைத்தார்.அதற்கு முன்பே, அதாவது 1948இலேயே பெரியவாணர் மரணமானார். பெரியவாணர் அமைத்த பிரமாண்டமான தாம்போதி அன்றுமுதல் இன்றுவரை இளமையாகவே காட்சியளிக்கிறது. எந்தப்போருக்கும் செல்லடிக்கும் குண்டுமழைக்கும் அது அசைந்து கொடுக்கவில்லை. அது அம்பலவாணரின் பெயரைச் சொல்லிக்கொண்டு இன்றும் கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கிறது. நன்றி:வீரசேரி(4-05-2003)-தம்பிஜயா தேவதாஸ் ——————————————————————————– வாணர்பால வரலாறு இலங்கையில் மிக நீளமானது இப்பாலமாகும் இப்பாலத்தின் அவசியம் பற்றி மிக நீண்ட காலமாகவே உணரப்பட்டு வந்துள்ள போதிலும் அதனை முன்னெடுத்துச் செல்வதற்கு எவருமற்ற நிலை இந் நூற்றாண்டின் ஆரம்பம் வரை காணப்பட்டது. இப்பாலம் அமைக்கப்படுமாயின் தீவுப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் நன்மை பெற வாய்பிருந்தபோதிலும் புங்குடுதீவு மக்களாலேயே முன்னெடுத்து செல்வது தவிர்க்க முடியாததாக இருந்தது. புங்குடுதீவு மக்கள் இப்பாலம் அமைக்கப்படாத காலத்தில் பட்ட கஸ்டங்களை வித்துவான் சி.ஆறுமுகம் அவர்கள் கவிதையில் பின்வருமாறு தெரிவிக்கின்றார். தோணிகளிற் காலைவைத்து ஏறின் கொஞ்சத் தூரந்தான் மிதக்குமவை! போறுக்கும் சேற்றில் ஆணென்ன பெண்ணென்ன! குழந்தையென்ன அகலாத நோய்பிடித்த கிழந்தானென்ன நாணின்றி ஆடைகளைத் தூக்கி நடுக்கடலில் புதை சேற்றில் நடந்த காட்சி தோணுதையா மனப்படத்தில் துயரம் யாவும் தொலைந்திடுமோ வாணர் வந்து தோன்றாவி;ட்டால்? நிறை மாதக் கர்ப்பிணியும் வயிறு நொந்தே நெடுநேரம் தோணியிலே நின்று கொண்டு இறiவா எம் விதியேதான் இதுவென்று ஏங்கிடுவாள்! அழுதிடுவாள்! என்னே வாழ்வு! மறையாதோ இக்கொடுமை என்றெண்ணி மகவுதனைப் பெற்றிடுவாள் தோணிக்குள்ளும் கறைபடிந்த வாழ்விதுவும் கலைந்ததம்மா கண்ணியஞ்சார் வாணர் வந்து பிறந்ததாலே! என்ற கவிதையிலிருந்து மக்கள் அனுபவித்த கஸ்டங்கள் தெளிவாகின்றது. 1890 ஆம் ஆண்டு திரு. க. அம்பலவாணரும் பெரியவாணர் 1893ம் ஆண்டு திரு. க. அம்பலவாணரும் சின்னவாணர் புங்குடுதீவில் பிறந்தனர். பேரியவாணர் புங்குடுதீவு அமெரிக்கமிஷன் பாடசாலை, கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். அக்காலங்களில் புங்குடுதீவு மக்கள் போக்குவரத்தில் பட்ட கஸ்டங்கள் அனுபவரீதியாக உணர்ந்தவர். திரு. க. அம்பலவாணர் தனது பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்த பின்னர் தொழில் தேடும் பொருட்டு மலாயா சென்றார். மலேசியாவில் தான் கண்ட அனுபவங்களைத் தமது சொந்த ஊரக்கு கிடைக்கச் செய்ய வேண்டுமெனப் பேரவாக் கொண்டிருந்தார். குறிப்பாக அங்கு காணப்படும் தாம் போதிகளைப் போல புங்குடுதீவுக்கும் – வேலணைக்கும் இடையில் அமைக்கப்படுதல் அவசியம் என்பதை உணர்ந்தார். இதனை செயல்படுத்த மலாயாவிலுள்ள புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி மலாயா -புங்குடுதீவு ஐக்கிய சங்கம் என்ற அமைப்பினை உருவாக்கி புங்குடுதீவு மக்களின் வளர்ச்சிக்கான உபாயங்களைக் கண்டறிந்தார். 1918ஆம் ஆண்டில் புங்குடுதீவு திரும்பிய பெரியவாணர் முறைப்படி பாலத்தை அமைக்க வேண்டுமென வீடுகள் தோறும் கையொப்பங்களை வாங்கி அரசுக்கு சமர்ப்பித்துவிட்டு மலாயா சென்றார். அரசு இதில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. மலாயாவில் இயங்கி வந்த மலாயா – புங்குடுதீவு ஐக்கிய சங்கத்தை பலப்படுத்தி பாலம் அமைக்கப்படல் வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு நாடு திரும்பினார். 1924, 1926, 1930, 1934, ஆம் ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் வாங்கப்பட்டு மீண்டும் மீண்டும் அரசினை வற்புறுத்தத் தொடங்கினார். புங்குடுதீவில் கையொப்பங்கள் சேர்ப்பதில் சின்னவாணர் செயற்பட கொழும்பில் அரச பிரதிநிதிகளுடன் சந்திப்புக்கள். பத்திரிகையாளர்களுக்கு குரல் கொடுத்தல், போக்குவரத்து அவலத்தை புகைப்படங்கள் மூலம் நாடு முழவதற்கும் அறியச் செய்தல் போன்றவற்றை பெரியவாணர் செய்து வந்தார். 1922ஆம் ஆண்டில் புங்குடுதீவு மகாஜன சேவா சங்கத்தை ஆரம்பித்து வாணர் சகோதரர்கள் 1926இல் அகில இலங்கை மகாஜள சங்கமாக மாற்றி தீவுப்பகுதியினை குறிப்பாக புங்குடுதீவின் அவல நிலையைநாடறியச் செய்தனர். இவ்வமைப்பினுடாக அரச பிரதிநிதிகள், தேசாதிபதிகள் ஆகியோரை அழைத்து வந்து பிரச்சினைகளை அவர்களுக்கு எடுத்து கூறினார்கள். பாலம் அமைப்பது சம்பந்தமாக சட்ட நிரூபண சபை அங்கத்தவர்களுக்கு எடுத்துக் கூறுவதில் பெரியவாணர் தவறவில்லை. இதன் விளைவாக 1925ஆம் ஆண்டு சட்ட நிரூபண சபையில் பாலம் அமைப்பு பிரேரணை விவாதத்திற்கு வந்தது. அப்போது சின்னவாணர் எண்பதுக்கு மேற்பட்ட தந்திகளை தேசாதிபதிக்கு பல்வேறு நிறுவனங்களினூடாக அனுப்பியிருந்தார். புங்குடுதீவு-வேலணைப் பாலம் அமைக்கப்படல் வேண்டுமென்பதில் சட்ட நிரூபண சபையில் அங்கத்தவர்களாக இருந்த கண்டி மாவட்ட பிரதிநிதி திரு. பண்டிற்பட்டுவந்துடாவை ஆங்கிலேயப் பிரதிநிதி சேர் வில்லியம்ஸ், திரு. ஏ. ஈ. குணசிங்கா ஆகியோர் பல்வேறு ஆதாரங்களுடன் வாதாடி இறுதியாக அனுமதியையும், நிதியையும் பெற்று விட்டனர். இவ் அனுமதி பெறுவதற்கு உழைத்தவர் பெரியவாணர் என்றால் அது மிகையாகாது. 1935ம் ஆண்டு பால வேலை ஆரம்பமாகியது. சின்னவாணரே பால வேலையை முன்னின்று செய்தார். இவை மட்டுமல்லாது கல்வி வளர்ச்சி, தபாற் கந்தோர், தொலைபேசி வசதி போன்ற பல்வேறு வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டு உழைத்தவர் பெரியவாணர். இவ்வாறாகப் பல்வேறு வழிகளில் சமூகப்பணி செய்த திரு. க. அம்பலவாணர் தீவக வளர்ச்சியை கருத்திற் கொண்டு 1947ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். மக்கள் அவரது சேவையைக் கருத்திற் கொள்ளாது தோல்வியுறச் செய்தனர். பேரியவாணர் மனித நேயம் படைத்தவர். பொதுத் தேர்தலில் தன்னுடன் போட்டியிட்டு வெற்றியீட்டிய திரு. அல்பிரட் தம்பிஐயாவை அழைத்து பாராட்டி உபசாரம் செய்து புங்குடுதீவு மக்களின் அவல நிலையைப் போக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகொளை ஏற்று திரு. அல்பிரட் தம்பிஐயா அயராது உழைத்து 1953 ஆம் ஆண்டு பாலத்தினை மக்கள் பயன் பாட்டுக்கு திறந்து வைத்தார்.பெரியவாணர் அவர்கள் 30 ஆண்டுகள் தன்னலம் பாராது உழைத்து உடல் இளைத்து 1948ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இயற்கை எய்தினார். அவர் நம்மிடையே இல்லையாயினும் அவரது பெயரைக் கொண்டு விளங்கும் வாணர் பாலம் இருக்கும் வரை அவரது பெயரும் தொடர்ச்சியாக துலங்கி வரும். வாணர் சகோதரர்கள் எம் கிராமத்துக்காக எவ்வளவோ கஸ்டங்களுக்கு மத்தியில் இப்பணியை நிறைவேற்றினார்கள் என்பது சொல்லத் தேவையில்லை. ஆனால் நாம் அவர் விட்டுச் சென்ற பணியை செவ்வனே செய்து முடித்துள்ளோமா என்றால் இல்லை என்பதே மகா உண்மையாகும். அன்று மலாயாவில் எண்ணிக்கையில் குறைந்தளவு வாழ்ந்த புங்குடுதீவு மக்களை ஒன்று திரட்டி இப்பாலத்தை அமைத்தார். ஆனால் இன்று பல ஆயிரம் பேர் வெளிநாடுகளில் வாழ்ந்தும் எம் கிராமத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்தீர்கள்? நாட்டுப் பிரச்சினையைச் சாட்டாக சொல்லி உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொண்டுடிருக்கிறீர்கள். இதில் ஒரளவு உண்மை இருக்கிறதுதான். ஆனால் எமது கிராமத்தை எதிர் காலத்தில் அபிவிருத்தி செய்ய இப்பொழுதிருந்தே ஆய்வுகளை, திட்டங்களை மேற்கொள்ள முடியும். இதனை நான் எனது காலத்திலேயே செய்து முடிக்க விரும்புகிறேன். புங்குடுதீவை மட்டுமல்லாது தீவுப்பகுதி முழவதுக்குமான ஆய்வுகளை செய்து நூல்களை வெளியிட விரும்புகிறேன். இதுபற்றி ஏற்கனவே பல கட்டுரைகளை வெளியிட்டாலும் முழுமையாக நூலாக வெளியிடப்படவில்லை. இந்த எனது பணிக்கு நீங்கள் ஒவ்வொருவரும் உதவி புரிந்து எம் தீவகத்தினை வளம் கொழிக்கும் )மியாக மாற்ற உதவுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன இக்கட்டுரை கலாநிதி கார்த்திகேசு குகபாலன் அவர்களால் எழுதிய தீவகம் – வளமும் வாழ்வும் என்ற நூலில் இருந்து திரு. சு. கோகிலதாசன் அவர்களால் தொகுக்கப்பட்டது
இடுகையிட்டது pungudutivu நேரம் 02:19